தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழகத்தில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு எடுத்துரைத்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள 23 முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடிய எடப்படி பழனிச்சாமி, தமிழ்நாட்டு அகதி முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், அதனால் அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts