தமிழகத்தில் மேலும் ஒரு கட்டிட விபத்து : 11 பேர் பலி

accidentசென்னைக்கு அருகேயுள்ள திருவள்ளூர் பகுதியில், ஒரு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளதில், 4 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் இந்த விபத்தையும், உயிரிழப்பை செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள உப்பரப்பாளையம் எனும் இடத்திலேயே, ஒரு கிடங்கின் சுவர் இடிந்து விழுந்ததில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

Related Posts