தமிழகத்தில் மன அழுத்தங்களுடன் வாழும் இலங்கை அகதிகளின் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஈழ அகதிகள் மறுவாழ்வு மையத்தின் பிரதான வைத்திய அதிகாரி எஸ்.நடராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 61,845 பேர் 24 மாவட்டங்களிலுள்ள 107 முகாம்களில் தங்கியுள்ளதாகவும், இவர்களில் அதிகளவானோர் கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான தற்கொலைகளைத் தடுப்பதற்காக முகாம்களிலுள்ள மக்களுக்கு ஆரம்ப ஆற்றுப்படுத்தல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், மக்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் இந்தியப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.