தமிழகத்தில் கரையொதுங்கிய மர்மப் படகு – இலங்கையைச் சேர்ந்ததா?

தமிழகத்தின் நாகை மாவட்டம் – வேதாரண்யத்தில் ஆளில்லா கண்ணாடியிழப் படகு ஒன்று கரை ஒதுங்கியது இன்று காலை தெரியவந்தது.

board-vallam-see

பதிவு எண் போன்ற விபரங்கள் இல்லாத இந்த படகு இலங்கையைச் சேர்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.

வேதாரண்யம், மணியன்தீவு கடற்கரையில் இஞ்சின் பொறுத்தப்பட்ட நிலையில் ஒதுங்கிய இந்த படகை, கைப்பற்றிய கடலோரக் காவல் நிலைய பொலிசார் மற்றும் பல்வேறு பாதுகாப்பு பிரிவு பொலிசாரும் விசாரித்து வருகின்றனர்.

Related Posts