தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு உயிராபத்து

தமிழகம் – மதுரையில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் தங்களது உயருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மதுரை – ஆணையூரில் உள்ள ஈழ அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமில் அத்துமீறி நுழையும் குண்டர்கள் குழுவினரினால் தங்களுக்கு உயிராபத்து ஏற்பட்டிருப்பதாக ஈழ அகதிகள் முறையிட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி முகாமிலிருந்து தொழிலுக்காகச் சென்றுவரும் இளைஞர்களை கடத்திச் செல்லும் முயற்சிகளும் அண்மைக்காலமாக இடம்பெற்றிருப்பதாக அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆணையூர் முகாம் ஈழ அகதிகள் கூடலூர் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குண்டர்கள் குழுவினரால் கடத்திச்செல்ல முயற்சித்தபோது அவர்கள் பிடியிலிருந்து தப்பிய இரு இளைஞர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Related Posts