தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தின் திருச்சி சிறப்பு அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் ஐந்துபேர் காலவரையற்ற உண்ணாவிரதப் பேராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

india

இலங்கையைச் சேர்ந்த சிவனேஸ்வரன், மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் ஆவணங்களின்றி இந்தியா வந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னையில் இருந்த அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த 2012ம் ஆண்டு முதல் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தங்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் பேராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts