தமிழகத்தில் இரு இலங்கை அகதிகள் பலி

தமிழகத்தின் பவானிசாகரில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இருவர் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளனர்.

ரவி (35), திலகன் (31) எனும் இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகமான தினமலர் குறிப்பிட்டுள்ளது.

பெயின்டராக வேலை செய்து வரும் இவர்கள் நேற்று மதியம் சிறுமுகை சென்றுவிட்டு, ஒரே இரு சக்கர வாகனத்தில் பவானிசாகர் வந்து கொண்டிருந்த போது, சத்தியமங்கலம்- மேட்டுப்பாளையம் சாலையில் சீரங்கராயன் கரடு அருகே வைத்து, எதிரே வந்த வேன் இவர்கள் மீது மோதியது.

இதில் திலகன் சம்பவ இடத்திலேயே பலியானார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ரவியும் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய வேன் சாரதியான வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷை (21), பவானிசாகர் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Posts