தமிழகத்தின் 13ஆவது முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராக நேற்று மாலை எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் வித்தியாசாகர் ராவ் முன்னிலையில் பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்நிகழ்வில் 30 அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

நேற்று மாலை 4.37 மணிக்கு ஆரம்பமான குறித்த நிகழ்வில் ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சத்த்தியப் பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

எடப்பாடி முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் 30 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வு 20 நிமிடங்கள் மாத்திரமே நடைபெற்றது.

குறித்த முப்பது அமைச்சர்களும் பன்னீர்ச்செல்வத்தின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts