தமிழகத்தின் புதிய அமைச்சரவை அறிவிப்பு!

தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா, புதிய அமைச்சரவையில் பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியலையும் அவரிடம் கையளித்தார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று திங்கட்கிழமை12 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார்.

அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

அமைச்சரவைப் பட்டியல் முழு விவரம்

முதல்வர் ஜெயலலிதா – பொது, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் துறை, காவல் மற்றும் உள்துறை

ஓ.பன்னீர் செல்வம் – நிதி
திண்டுக்கல் சி.சீனிவாசன் – வனம்
எடப்பாடி கே.பழனிச்சாமி – பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்
செல்லூர் கே.ராஜூ – கூட்டுறவு மற்றும் தொழிலாளர் துறை
பி.தங்கமணி – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை
எஸ்.பி.வேலுமணி – உள்ளாட்சி நிர்வாகம்
டி.ஜெயக்குமார் – மீன்வளம்
சி.வி.சண்முகம் – சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறை
கே.பி.அன்பழகன் – உயர் கல்வி
டாக்டர் வி.சரோஜா – சமூகநலன் மற்றும் சத்துணவு
கே.சி.கருப்பண்ணன் – சுற்றுச் சூழல் துறை
எம்.சி. சம்பத் – தொழில் துறை
ஆர்.காமராஜ் – உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை
ஓ.எஸ்.மணியன் – கைத்தறி மற்றும் ஜவுளி உடுமலை
ராதாகிருஷ்ணன் – வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சி
சி.விஜயபாஸ்கர்- சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
எஸ்.பி.சண்முகநாதன் – பால்வளம்
ஆர்.துரைக்கண்ணு – விவசாயம் மற்றும் கால்நடைத் துறை
கடம்பூர் ராஜூ – செய்தித் துறை
ஆர்.பி. உதயகுமார் – வருவாய் துறை
கே.டி.ராஜேந்திர பாலாஜி – ஊரக தொழில் துறை
கே.சி.வீரமணி – வணிக வரி
பி.பெஞ்சமின் – பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் வெல்லமண்டி
என்.நடராஜன் – சுற்றுலாத் துறை
எஸ்.வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலன்
வி.எம்.ராஜலட்சுமி – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
டாக்டர் எம்.மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பம்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்துத் துறை

Related Posts