“தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு” “ஒரு அரசியல் கைதியேனும் சிறைகளில் இருக்கக்கூடாது அனைவரையும் விடுதலை செய்ய வேணடும்” என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவர் ஒருவர் ரயில் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அண்மையாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் கோப்பாயைச் சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தூரன்(வயது 18) என்ற மாணவரே இவ்வாறு மரணமானவராவார்.
மாணவன் தான் உயிரிழக்க முன்னர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
‘அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி’ நல்லாட்சி அரசாங்கம் அனைத்து அரசியல் கைதிகளையும் (political prisoners) புனர்வாழ்வளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் “ஒரு தமிழ் அரசியல் கைதிகளேனும் சிறையில் இருக்க முடியாது. இந்த அரசியல் கைதிகளை உடனடியாக (immediately) விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் எனக்குப் புரிந்தும்கூட (understand) இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு இன்னமும் புரியவில்லையே என்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. The goverment must deliver all tamil political prisoners immediately என்றும் தமிழ் உறவுகளை உயிராய் நேசிக்கும் உண்மையுள்ள செந்தூரன்” – என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.