தமன்னாவை டென்சன் செய்த கேள்வி!

பாகுபலி படத்திற்கு பிறகு தோழா படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் தமன்னா. கூடவே மேற்படி இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலுமே வெற்றி பெற்றிருப்பதால் அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் காணப்படுகிறார்.

அதோடு, விஜய்சேதுபதியுடன் தான் நடித்துள்ள ‘தர்மதுரை’ படமும் தனக்கு அடுத்து இன்னொரு ஹிட்டாக அமையும் என்பது அவரது அடுத்த நம்பிக்கையாக உள்ளது. அதனால் இந்த உற்சாகத்தோடு அடுத்தபடியாக விஜய், அஜித், சூர்யா படங்களை கைப்பற்றி விடும் முயற்சிகளிலும் முழுவீச்சில் அவர் இறங்கியிருக்கிறார் தமன்னா.

இந்த நேரத்தில் தமன்னாவை ஒரு கேள்வி பெருத்த டென்சன் ஏற்படுத்துகிறதாம். அதாவது, ராஜமவுலி இயக்கத்தில் அவர் நடித்த பாகுபலி படத்தின் முதல் பாகத்தை விட 2-வது பாகத்தில் அனுஷ்காவுக்கே முக்கியத்துவம் கொடுத்து விட்டு தமன்னாவின் ரோலை டம்மி பண்ணியிருப்பதாக வெளியான செய்தியை அனைவருமே தமன்னாவிடம் கேட்டு வெறுப்பேற்றுகிறார்களாம்.

இந்த கேள்விக்கு இதுவரை பதிலளிக்காமல் மெளனம் காத்து வந்த தமன்னா இப்போது, பாகுபலி-2 படத்திலும் எனது ரோலுக்கு முக்கியத்துவம் உள்ளது. அனுஷ்கா சம்பந்தப்பட்ட ப்ளாஷ்பேக் முடிந்த பிறகு எனது ரோலுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த உண்மை பாகுபலி-2 திரைக்கு வரும்போது உங்களுக்கே தெரியும் என்கிறாராம் தமன்னா.

Related Posts