Ad Widget

தப்பு செய்வேன் என எதிர்பார்த்து வாளோடு காத்திருந்தனர்.. விமர்சகர்கள் பற்றி டோணி

“தவறு நடைபெறும் என எதிர்பார்த்து நிறைய பேர் வாளை தயாராக பிடித்து வைத்திருந்தனர்” என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி தெரிவித்தார்.

dhonis

2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. டோணி பொறுப்பாக ஆடி 92 ரன்களுடன் கடைவரை களத்தில் நின்றதால் இந்தியா 247 ரன்களை எட்ட முடிந்தது.

பவுலர்கள் மற்றும் ஃபீல்டர்கள் பங்களிப்பால் தென் ஆப்பிரிக்காவை 225 ரன்களில் ஆல்-அவுட் செய்ய முடிந்தது.

போட்டிக்கு பிறகு, பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய டோணியிடம், சமீபகாலமாக அவருக்கு எதிராக எழுப்பப்பட்டுவரும் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. டி20 தொடரை இழந்ததோடு, முதல் ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோற்றதால் டோணி மீது கடும் விமர்சனம் எழும்பியிருந்தது.

கேப்டனாக மட்டுமின்றி, சக வீரராகவும், டோணி சிறப்பாக செயல்படவில்லை என்று விமர்சனம் செய்த விமர்சகர்களும், பத்திரிகைகளும், டோணியை நீக்கிவிட்டு வேறு நபரை தேட வேண்டும் என்று ஆலோசனை வழங்கின. அகர்க்கர், அசாருதீன் போன்ற முன்னாள் பிரபலங்களும் அதில் இணைந்துகொண்டனர்.

ஆனால், நேற்றைய ஆட்டத்தில், தனிப்பட்ட வீரராக சிறப்பாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்த டோணி, கேப்டன் என்ற முறையில், பவுலர்களை முக்கியமான நேரங்களில் மாற்றி, மாற்றி விக்கெட்டுகளை கொள்முதல் செய்யவும் தவறவில்லை. அனைத்து துறைகளிலுமே நேற்று டோணி அபாரமாக ஆடினார். இதை கருத்தில் வைத்துதான் டோணியிடம் அந்த கேள்வி எழுப்பப்பட்டது.

கேள்விக்கு பதிலளித்த டோணி, மிகவும் கடினமான ஒரு போட்டியை ஆடினோம். அது ஒன்றும் எளிதான காரியம் இல்லை. இருப்பினும், தப்புகள் நடந்துவிடாதா என்று எதிர்பார்த்தபடி வாளை தயாராக பிடித்தபடி சிலர் காத்திருந்தனர் என்று சொன்னார்.

Related Posts