நீதிமன்றில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற போது தப்பிச் சென்ற குடு பேபி என அழைக்கப்படும் கரிகாலன் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேடுதல் நடத்திய வேளையில் யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
180 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் குடு பேபி என அழைக்கப்படும் கரிகாலன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து அண்மையில் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட நபரை நேற்றுப் புதன்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவற்காக யாழ். நீதிமன்ற சிறைக் கூடத்தில் இருந்து மன்றிற்கு அழைத்துச் செல்லும் போது தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த நபர் மாலை 4 மணியளவில் யாழ். மத்திய பஸ் தரிப்பிடப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவரை மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.