தப்பிச்சென்ற நான்கு கைதிகளில் இருவர் கைது!

முல்லைத்தீவில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, தப்பிச்சென்ற நான்கு கைதிகளில் இருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நால்வர் நேற்று முன்தினம்(செவ்வாய்கிழமை) மாலை 3 மணியளவில் நீதிமன்ற மலசலகூடத்தை உடைத்து தப்பிச்சென்றிருந்தனர்.

இந்தநிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய இரண்டு கைதிகளையும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தப்பிச்சென்ற சந்தேகநபர்களில் ஒருவர் கொலைக்குற்றச்சாட்டு தொடர்பிலும் மற்றுமொருவர் வீடுடைப்பு தொடர்பிலும் ஏனைய இருவரும் திருட்டுச்சம்பவங்கள் தொடர்பிலும் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related Posts