தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றல் இன்றுடன் நிறைவு

ஜனாதிபதி தேர்தல் பணிகளில் ஈடுபடவிருக்கின்ற அரச உத்தியோகஸ்தர்களின் தபால் மூல விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை, இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த திகதி எக்காரணத்தைக் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது என்றும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் வாக்களிப்பு விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என்றும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

Related Posts