தபால் மூல வாக்காளர்களுக்கு 18ம் திகதியும் சந்தர்ப்பம்

mahinda-deshpriyaவடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தவறியோருக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி காலை 8.30 தொடக்கம் பகல் 12 மணிவரை வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் மற்றும் தேர்தல்கள் செயலகம் என்பவற்றில் தபால் மூல வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியும்.

தபால் மூல வாக்களிப்பு 09ம் 10ம் திகதிகளில் இடம்பெற்றது. பின் 12, 13 மற்றும் 14ம் திகதிகளிலும் வாக்களிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

எனினும் வாக்களிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts