தபால் மூல வாக்காளர்களின் வாக்கு சிட்டுக்கள் அனுப்பி வைப்பு

postal-voteநடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் வாக்குச் சீட்டுக்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.

இதற்கமைவாக தபால் மூலம் வாக்களிப்பவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 9,10 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலிற்கு தபால் மூலம் வாக்களிக்க யாழ்.மாவட்டத்தில் மட்டும் 9,301 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுள் பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Posts