உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி ஒவ்வொரு மாவட்ட செயலகத்திலும் விநியோகம் செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படும் திகதி
மாவட்ட செயலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் அல்லது உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படை, விசேட பொலிஸ் பிரிவுகள் ஆகியவற்றில் கடமையாற்றுபவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
முப்படை முகாம்கள் மற்றும் அரச நிறுவனங்களில் கடமையாற்றுபவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
மேற்குறிப்பிட்ட திகதிகளில் வாக்களிக்க தவறியவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 மற்றும் 28 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.