தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு: தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி 25 ஆம் 26 ஆம் திகதிகளில் நடாத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இத்தகவலை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான மேலதிக ஆணையாளர் சமன் ஸ்ரீரத்நாயக்க ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நேரடியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 22 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts