தபால் மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் இன்று!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் மூன்றாம் நாள் இன்றாகும் (04).

கடந்த ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்குகளை அளிக்க முடியாத முடியாத முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் தபால் வாக்குகளை அளிக்க முடியாத வாக்காளர்கள் எதர்வரும் நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Posts