தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் கால எல்லை நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதனால் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ள வாக்காளர்கள் விரைவாக விண்ணப்பங்களை உரிய முறையில் பூரணப்படுத்தி சம்பந்தப்பட்ட அத்தாட்சிப்படுத்தும் அலுவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மார்ச் 16 ஆம் திகதிக்கு பின்னர் குறித்த தெரிவத்தாட்சி அலுவலருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

அவ்வாறான விண்ணப்பங்கள் காலதாமதமாக கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களாக கருதி நிராகரிக்கப்படலாம் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts