தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

தபால் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியிலான பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

நுவரெலியா, கண்டி மற்றும் காலி கோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள தபால் அலுவலகங்களை சுற்றுலா ஹோட்டலாக மாற்ற அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனடியாக நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி குறிப்பிட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் இணங்கியுள்ள நிலையில், இந்த வேலை நிறுத்தம் நியாயமற்றது என, தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts