முதன்முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா, கார்த்தி!

`பருத்தி வீரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களம் அமைந்ததால், தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக தற்போது வலம் வருகிறார்.

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `காற்று வெளியிடை’ ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், வசூல் ரீதியாக ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

இதுஒருபுறம் இருக்க அண்ணன் சூர்யாவும் – தம்பி கார்த்தியும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பார்களா என ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக புதிய செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது, பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். அந்த படத்தை சூர்யா தனது சொந்த நிறுவனமான 2டி என்டர்டெயிண்மண்ட் மூலம் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா – கார்த்தி இருவரும் இணைந்து நடித்தார்களானால், அது இருவரது ரசிகர்களுக்கும் டபுள் ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அது எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts