தனுஷ் பலவித திறமை கொண்டவர்: அமலாபால்

அமலாபால் தற்போது தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘வடசென்னை’ படங்களில் ஜோடியாக நடிக்கிறார். இதுபற்றி கேட்ட போது அமலா பால் அளித்த பதில்…

“தனுஷ் ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்தேன். இப்போது அதன் 2-வது பாகத்திலும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம். தனுஷ் எனக்கு பிடித்த நடிகர். அவரிடம் பலவித திறமைகள் இருக்கின்றன. கதை, கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்வார். தனுஷ் படங்கள் என்றால் அவர் நினைவுக்கு வரமாட்டார். அவரது கதாபாத்திரங்கள் தான் கண்முன் நிற்கும். எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் திறமையாக நடித்து விடுவார்.

தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தில் வடசென்னை பெண்ணாக வருகிறேன். சவாலான வேடம். அது ஒரு காலகட்டத்தில் நடக்கும் படமாக தயாராகிறது. கதை கேட்டதும் இரண்டு நாட்களில் அந்த பாத்திரமாகவே மாறிவிட்டேன்.

இந்தி ‘குயின்’ படம் மலையாளத்தில் ‘ரீமேக்’ ஆகிறது. ரேவதி இயக்கும் இந்த படத்தில் நான் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் எனக்கு பிடித்த நடிகை. சிறுவயதில் அவரைப் பார்த்து தான் வளர்ந்து இருக்கிறேன். இது தவிர ‘திருட்டுப்பயலே’ இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறேன்.

நாங்கள் பிரிந்து விட்டாலும் விஜய் இப்போதும் எனக்கு பிடித்தவர். நாங்கள் ஒருவர் மற்றவரிடம் இருந்து அற்புதமான வி‌ஷயங்களை கற்று இருக்கிறோம். நான் சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். எனக்கு பிடித்தமானது நடிப்பு. சினிமாவில் நடிப்பதற்காகவே வாழ்கிறேன்.

எதிர் காலத்தில் தொழில் அதிபராவேன். சென்னையில் ஓட்டல் தொடங்குவேன். அங்கு யோகா, தியான பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்வேன்” என்றார்.

Related Posts