தனுஷ் படத்தில் மீண்டும் ஏ.ஆர்.ரகுமான்!

அனிருத்தை இசையமைப்பாளராக்கியவர் தனுஷ். அந்த வகையில், தான் நடித்த சில படங்களில் அவரை இசையமைக்க வைத்தார். அதேபோல் சிவகார்த்திகேயனும் தனது படங்களுக்கு அனிருத் இசையமைக்க சிபாரிசு செய்து வருகிறார். இந்த நிலையில், அஜீத்தின் வேதாளம் படத்துக்கு இசையமைத்த பிறகு நட்சத்திர இசையமைப்பாளராகி விட்டார் அனிருத். என்றாலும், இடையினில் பீப் சாங் விவகாரத்திற்கு பிறகு அனிருத்தின் அதிரடி இசைப்பயணத்தில் ஒரு சிறிய சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

danush-rahuman

காரணம், சிவகார்த்திகேயன் அனிருத்தை தொடர்ந்து தனது படங்களுக்கு இசையமைக்க வைத்து வரும் நிலையில், தனுஷ் தங்க மகனுக்குப்பிறகு தான் நடித்துள்ள கொடி, தொடரி, என்னை நோக்கி பாயும் தோட்டா என எந்த படத் துக்கும் அவருக்கு சிபாரிசு செய்யவில்லை. இதில் கெளதம்மேனன் படங்களுக்கு இதுவரை இசையமைக்காத அனிருத், என்னை நோக்கி பாயும் தோட்டா படம் மூலம் அவருடன் கைகோர்த்து விட வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டாராம். ஆனால் அது ஒர்க்அவுட்டாகவில்லையாம்.

ஆனால், மின்னலே படத்திலிருந்து ஹாரிஸ் ஜெயராஜூடன் கூட்டணி அமைத்து வந்த கெளதம்மேனன், பின்னர் ஏ.ஆர்.ரகுமானுடனும் இணைந்தார். அதோடு, என்னை அறிந்தால் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜையே இசையமைப்பாளராக்கிய கெளதம்மேனன், அச்சம் என்பது மடமையடா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானை இசையமைக்க வைத்துள்ளார். அடுத்து இப்போது தனுஷை வைத்து இயக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமானை இசையமைக்க வைக்கிறாராம். மேலும், இதற்கு முன்பு தனுஷ் நடித்த மரியான், இந்தியில் நடித்த ராஞ்சனா படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts