தனுஷ் படத்தில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி!

நடிகர் தனுஷ் முதன்முறையாக இயக்கி வரும் படம் பவர்பாண்டி. இப்படத்தில் தனுஷின் தந்தையான டைரக்டர் கஸ்தூரிராஜா இயக்கிய முதல் படமான என்ராசாவின் மனசிலே படத்தில் நாயகனாக நடித்த அதே ராஜ்கிரண் நாயகனாக நடித்து வருகிறார்.

அவருடன், பிரசன்னா, நதியா, சாயாசிங், ரோபோ சங்கர் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்களுடன் டைரக்டர் கெளதம்மேனன், தனுஷ், மடோனா, திவ்யதர்ஷினி ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர்.

மேலும், நேற்று முன்தினம் விஜய் டிவி திவ்யதர்ஷினி நடித்த காட்சிகளை படமாக்கியதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் தனுஷ்.

சிறப்புத் தோற்றத்தில் அவர் சிறப்பாக நடித்ததாகவும் கூறியுள்ளார் தனுஷ். மேலும், 1990-ல் சுபயத்ரா என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான திவ்யதர்ஷினி, அதன்பிறகு தமிழில் ஜூலி கணபதி, நளதமயந்தி, சரோஜா உள்பட பல படங்களில் நடித்தார். அந்தவகையில், பவர் பாண்டி தொகுப்பாளினி டிடிக்கு 7வது படமாகும்.

Related Posts