தனுஷ் படத்தில் ‘டிடி’!

காபி வித் ‘டி-டி’ என்ற விஜய் டிவி நிகழ்ச்சியை நடத்தி புகழ் பெற்றவர் டிடி. இவர் ஏற்கனவே கமலஹாசன், மாதவன் ஆகியோர் நடித்த நள தமயந்தி, விசில், சரோஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதன்பின் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் சரியாக இல்லாத காரணத்தினால், முழுநேரமாக டி-வி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது தனுஷ் தயாரித்து இயக்கிவரும் பவர் பாண்டி படத்தில், டிடி தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கவுள்ளார்.

பவர் பாண்டி படத்தில் ராஜ் கிரண், பிரசன்னா, நதியாம் சாய சிங், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது இந்த பட்டியலில் டிடி யும் இணைந்துள்ளார். இப்படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Posts