தனுஷ் படத்திலிருந்து விலகி சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கிறாரா சமந்தா?

தனுசுடன் தங்கமகன் படத்தில் நடித்தவர் சமந்தா. அந்த படத்தில் அவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட்டானது. அதனால் அதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்திலும் தனுசுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாதான் கமிட்டாகியிருந்தார். ஆனால் இப்போது சமந்தா வேடத்தில் அமலாபால் நடித்து வருகிறார். அதற்கு காரணம், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்து கொள்ளவிருப்பதால் வடசென்னை படத்தில் இருந்து அவர் விலகியதாக கூறப்பட்டது.

siva-shamantha-danush

ஆனால், இப்போது அவர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். தனுஷ் படத்தில் இருந்து வெளியேறிய சமந்தா சிவகார்த்திகேயன் படத்தில் கமிட்டாகியிருப்பதால், அவர் வேறு பிரச்சினையால் வெளியிருப்பாரோ என்கிற யூகங்கள் கோலிவுட்டில் வெளியாகியிருக்கிறது. ஆனால், இதுகுறித்து சமந்தா தரப்பில் கூறும்போது, வடசென்னை படத்தின் கதை பிடித்திருந்ததால் அதில் நடிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார் சமந்தா. ஆனால், அந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்கப்போவதாகவும் அந்த மூன்றிலுமே சமந்தா நடிக்க வேண்டும் என்று கூறியதாலும்தான் அவர் நடிக்கவில்லையாம். காரணம், அடுத்த ஆண்டு நாகசைதன்யா- சமந்தா திருமணம் நடப் பது உறுதியாகி விட்டதால். அதன்பிறகு சமந்தா நடிப்பை தொடர்வது பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லையாம்.

அதோடு, சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலிலேயே படமாக்கி விடப்போகிறார்களாம். திருமணத்திற்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் அதுவரை ஓய்ந்திருக்க வேண்டாமே என்பதினால்தான் இடைபட்ட நேரத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் படத்தில் கமிட்டாகியிருக்கிறாராம் சமந்தா.

Related Posts