தனுஷ் நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய அதிரடி அறிவிப்புகள்

தனுஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ப.பாண்டி’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி நேற்று ரசிகர்களிடம் டுவிட்டர் பக்கத்தில் நேரடியாக பேசிய தனுஷ், தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர் பேசும்போது,

நான் நடிக்கவிருக்கும் ‘மாரி-2’ படத்தை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளோம். கார்த்திக் சுப்பாராஜ் உடன் இணையவிருக்கும் படம் அக்டோபர் மாதத்தில் தொடங்கவிருக்கிறது. ஹாலிவுட்டில் நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

அடுத்ததாக படம் இயக்குவது பற்றி இன்னும் நான் யோசிக்கவில்லை. வேலையில்லா பட்டதாரி-2 மிகவும் சிறப்பாக வந்துள்ளது. விஐபி1-ஐ விட இந்த படம் உங்களை சந்தோஷப்படுத்தும், காஜோலின் நடிப்பும் பேசப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts