தனுஷ் திரைப்பயணத்தையே மாற்றப்போகும் படம்!

தமிழ் திரையுலகின் புருஸ்லி என்று அழைக்கப்படுபவர் தனுஷ். இவர் நடித்த ஆடுகளம் திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கியது மட்டுமில்லாமல், கொலை வெறி பாடலின் மூலம் உலகப் புகழ் பெற்றார்.

தற்போது பாலிவுட்டிலும் கலக்க ஆரம்பித்துவிட்டார், இவர் நடித்த ராஞ்சனா 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் இவர் நடிப்பில் வெளிவரயிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி.

velaiella-paddatharey

இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே 16 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது, மேலும் இதுவரை தனுஷ் திரைப்பயணத்தில் வெளிவந்த படங்களின் சாதனைகளை எல்லாம் இப்படம் முறியடிக்கயிருக்கிறது.

இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 400க்கு மேற்ப்பட்ட திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவிருக்கிறது. இது அஜித்-விஜய் படங்களின் ரிலிஸ்க்கு நிகரானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts