ஒரே நேரத்தில் பல படங்களில நடித்துக்கொண்டிருப்பவர்களில் விஜயசேதுபதியும் ஒருவர். இவரது கால்சீட் கிடைக்காதா என்று சில படாதிபதிகளும், இயக்குனர்களும் கூட அலைந்து கொண்டிருக்கின்றனர், ஆனபோதும், ஆரம்பத்தில் நட்புக்காக சில படங்களில் கமிட்டான விஜயசேதுபதி இப்போது அதிலிருந்து விடுபட்டு, கதை பிடித்திருந்தால் மட்டுமே யாருடைய படமாக இருந்தாலும் நடிப்பேன் என்று கதை கேட்பதற்கு முன்பே தனது சார்பில் ஒரு கோரிக்கையை வைத்து விட்டுத்தான் கதை கேட்கவே தயாராகிறார்.
மேலும், சமீபத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா ஒரு படத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் பரவின. ஆனால், இப்போது பார்த்தால் அதுசம்பந்தமாக த்ரிஷாவை அணுகியபோது அவர் மறுத்து விட்டதாக செய்தி பரவியுள்ளது.
இதேபோல், தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் இப்போது டாணாவில் நடிப்பது போன்று அடுத்து அவர் தயாரிக்கும் ஒரு படத்தில் விஜயசேதுபதி நடிப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தி பரவியது. ஆனால், அப்போது அவுட்டோரில் இருந்ததால அதுபற்றிய எந்த கருத்தும் சொல்லாமல் இருந்த விஜயசேதுபதி. இப்போது அதுபற்றி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், எனக்கு பிடித்த நடிகர்களில் தனுசும் ஒருவர். அவரது தயாரிப்பில் நடிக்க சான்ஸ் கிடைத்தால் ரொம்ப சந்தோமாக ஏற்பேன். ஆனால். அதுசம்பந்தமாக என்னை இதுவரை யாரும் அணுகவில்லை. அதனால் தனுஷ் தயாரிப்பில் நான் நடிப்பதாக வெளியான செய்தி தவறானது என்று விஜயசேதுபதி தெரிவித்துள்ளார்.