வேலையில்லா பட்டதாரி டீம் அப்படியே இன்னொரு படத்தை எடுக்கிறது. தயாரிப்பும், நடிப்பும் தனுஷ், இயக்கம் வேல்ராஜ், இசை அனிருத் என அதே டீம். நாயகி மட்டும் அமலா பாலுக்குப் பதில் சமந்தா, எமி ஜாக்சன் என இரட்டை வெடிகள்.
இந்தப் புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அதற்குள் கம்போஸிங்கை தொடங்கிவிட்டார் அனிருத். தனுஷ் – அனிருத் கூட்டணி இணையும் போதெல்லாம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். கொலவெறி மாதிரி அவர்களின் ரசனைக்கு ஏதாவது அசைவ அயிட்டம் கண்டிப்பாக கிடைக்கும்.
முக்கியமான செய்தி, இந்தப் படத்திலும் பாடலாசிரியர் தனுஷ் தனது திறமையை காட்டப் போகிறார்.