தனுஷை ஸ்டைலிஷாக மாற்றிய கெளதம்மேனன்!

தொடர்ந்து சிங்கிள் வேடங்களில் நடித்து வந்த தனுஷ் முதன்முறையாக கொடி படத்தில் அண்ணன்-தம்பியாக நடித் துள்ளார். அதில் ஒரு வேடத்தில் கதர் வேஷ்டி சட்டை அணிந்த அரசியல்வாதியாக நடித்துள்ளார். இந்த படத்தில் தனது இரண்டு வேடங்களிலும் வித்தியாசம் காட்டுவதற்காக பர்பாமென்ஸ் மட்டுமின்றி பாடிலாங்குவேஜ், ஹேர்ஸ்டைல் என மாற்றி நடித்துள்ளார் தனுஷ்.

அதேபோல் அதற்கடுத்து முதன்முறையாக கெளதம்மேனனின் இயக்கத்தில் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கும் தனுஷ், இதுவரையில்லாத அளவுக்கு ஸ்டைலிஷான நடிகராக மாறியிருக்கிறார். அவரது காஸ்டியூம், ஹேர்ஸ்டைல் என ஒவ்வொரு விசயத்திலும் கவனம் செலுத்தி தனுஷே எதிர்பார்க்காத அளவுக்கு அவரை மாற்றி விட்டாராம் கெளதம்மேனன்.

மேலும், இந்த படத்தில் சில காட்சிகளில் இரண்டு வேடங்களில் நடிக்கும் தனுசுக்கு ஒரே லொகேசனில் காட்சிகள் இருந்த போதும், ஒரேநேரத்தில் அந்த காட்சிகளை படமாக்காமல், ஒரு வேடத்துக்கான காட்சிகளை மட்டுமே முதலில் படமாக்கிய கெளதம்மேனன், அந்த கெட்டப்புக்கான அனைத்த காட்சியும் எடுத்த பிறகு தனுஷை அடுத்து கெட்டப்புக்கு முழுமையாக மாற்றிய பிறகு அதே லொகேசனில் மீண்டும் படப்பிடிப்பு நடத்துகிறாராம். ஒவ்வொரு வேடத்துக்குமிடையே துளியளவும் சாயல் தென்படக்கூடாது என்பதற்காக இப்படி திட்டமிட்டுள்ளாராம் கெளதம்மேனன்.

Related Posts