தனுஷூடன் நடிக்க ஆசை: நடிகை ரித்திகா சிங்

‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ரித்திகா சிங் கூறுகையில் ”ஆண்டவன் கட்டளை படத்தில் ரிப்போர்ட்டராக நடிக்க பல சேனல்களைப் பார்த்து அவர்களுடைய நடையுடை பாவனைகளை கற்றுக்கொண்டேன். எனக்கும் இப்போது கேள்வி கேட்க தெரியும். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவிடம் பேட்டி எடுக்க விரும்புகிறேன்.

ritika

இன்னும் சரியாக தமிழ்பேச வரவில்லை. இப்போது மற்றவர்கள் தமிழில் பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது. படப்பிடிப்பில் மற்றவர்கள் சொல்வதை மொழிபெயர்த்து சொல்ல எனக்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் இருக்கிறார். விரைவில் தமிழ்பேச கற்றுக்கொள்வேன். முதல் படத்தில் தேசிய விருது கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இனி எந்த வேடத்தில் நடித்தாலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பு வந்திருக்கிறது.

தமிழில் தனுஷ் பிடிக்கும். அவருடன் நடிக்க ஆசை. நான் ஜோதிகாவின் ரசிகை. அவரது நடிப்யை மிகவும் ரசிப்பேன். தமிழ் ரசிகர்களை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஒரு படம் தான் நடித்திருக்கிறேன். என்றாலும் என்னை மிகவும் பாராட்டுகிறார்கள். முகத்தில் காயம்பட்டால் படத்தில் நடிப்பதை பாதிக்கும் என்பதால் இப்போது பாக்சிங் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடிக்க விஜய்சேதுபதி மிகவும் உதவினார். நடிப்புதிறமையை கற்று வருகிறேன். படப்பிடிப்பில் இயக்குனர் சொல்வதை செய்கிறேன். அடுத்து பி.வாசு இயக்கும் ‘சிவலிங்கா’ படத்தில் ராகவா லாரன்சுடன் நடிக்கிறேன். தெலுங்கில் வெங்கடேசுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன்” என்றார்.

Related Posts