பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘மாரி’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்துடன் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் அனிருத் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது, இப்படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப்பாடலுக்கு அனிருத் நடனமாடவிருப்பதாக கூறப்படுகிறது.
‘மாரி’ படப்பிடிப்பில் தனுஷுடன், அனிருத்தும் இணைந்து நடனமாடுவதுபோல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், மாரி படப்பிடிப்பின்போது இரண்டு பேரும் மொட்டைமாடியில் அமர்ந்திருப்பது போன்ற படத்தை அனிருத் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, இது மாரி சீசன். மறுபடியும் தனுஷுடன் மொட்டை மாடியில் அமர்ந்து தரை டிக்கெட்டில் தனுஷ்- அனிருத்தின் ஆல்பம் உங்களை நோக்கி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, ‘எதிர்நீச்சல்’ படத்துக்காக, தனுஷும், அனிருத்தும் மொட்டை மாடியில் உட்கார்ந்து கொண்டு காமெடியாக பேசுவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. அதை நினைவுகூறி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் அனிருத்.
அனிருத்-தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களில் அனிருத் எப்படியாவது ஒரு பாடலுக்கு தலைகாட்டி விடுவார். அந்த வரிசையில் இந்த படத்திலும் தனுஷுடன் இணைந்து அனிருத் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதாக கூறப்படுகிறது.