தனுஷுக்கு வாழ்த்து சொன்ன அனிருத், சிம்பு

தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் ‘பவர் பாண்டி’ படத்தின் இசை நேற்று வெளியானது. ‘ஜோக்கர்’ படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டனின் திறமையைப் பார்த்து அவருக்கு ‘பவர் பாண்டி’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தனுஷ்.

அது திரையுலகில் உள்ள பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளராக கடந்த சில வருடங்களாக இருந்த அனிருத்தை விட்டு ஷான் ரோல்டனுக்கு தனுஷ் ஏன் வாய்ப்பு கொடுத்தார் என்று அனைவருமே ஆச்சரியத்தில் பார்த்தார்கள்.

தனுஷும், அனிருத்தும் பிரிந்துவிட்டார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இப்போது ‘பவர் பாண்டி’ படத்தின் இசையைக் கேட்டு அனிருத், தனுஷுக்கும், ஷான் ரோல்டனுக்கும் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

“சகோதரர்களே, உங்கள் ஆல்பம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற எனது உளம் கனிந்த நல் வாழ்த்துகள்” என அனிருத் வாழ்த்தியுள்ளார்.

தனுஷின் போட்டியாளரும், தற்போது ‘சக்கப் போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் மாறியுள்ள சிம்பு, “மிகவும் நன்றாக, விரும்பத்தக்க ஆல்பம். ‘சூரக்காத்து’ பாடல் என்னுடைய ஃபேவரிட். குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்” என வாழ்த்தியுள்ளார்.

இவர்கள் தவிர, திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் தனுஷுக்கும், ஷான் ரோல்டனுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts