தனுஷுக்கு போட்டியாக டண்டனக்கா பாடும் அனிருத்

தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்தில் இடம்பெற்ற ‘டங்காமாரி ஊதாரி’ என்ற பாடலை எழுதியவர் ராகேஷ். இவர் எழுதிய அந்த பாடலை மரணகானா விஜி, தனுஷ், நவீன் மாதவன் ஆகியோர் இணைந்து பாடினர். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

aniruth

இந்த பாடலுக்கு பிறகு ராகேஷுக்கு நிறைய பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், ஜெயம் ரவி-ஹன்சிகா நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார் ராகேஷ்.

இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். ‘டண்டனக்கா’ என்று தொடங்கும் அந்த பாடலுக்கு டி.இமான் இசையமைக்க, அனிருத் பாடி அசத்தியுள்ளார். ‘டங்காமாரி’ பாடலைப் போன்று இந்த பாடலும் பெரிய அளவில் வெற்றியைத் தேடித்தரும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.

‘ரோமியா ஜுலியட்’ படத்தை லட்சுமண் என்பவர் இயக்குகிறார். கூடிய விரைவில் படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளனர். இந்த வருடத்தில் படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

Related Posts