தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடித்துள்ள ‘தங்கமகன்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இவ்விரு படங்களுக்கு பிறகு தனுஷ், துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகள் இருவரை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய்யின் அப்பாவும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், தனுஷுக்கு அப்பாவாக நடிக்கவிருக்கிறார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் ‘டூரிங்டாக்கீஸ்’ என்ற படத்தை இயக்கி, அதில் நடிக்கவும் செய்தார். அதன்பிறகு, தனுஷ் படத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே, முன்னணி நடிகர்களான விக்ரம், விஷால் ஆகியோரின் அப்பாவும் சினிமாவில் நடித்து வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.