தனுஷின் அம்மாவாக மீண்டும் சரண்யா!

இளவட்ட நடிகர்களுக்கு அம்மாவாக தொடர்ந்து நடித்து வரும் சரண்யா, தனுசுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில்தான் இணைந்தார்.

saranya-danush

அந்த படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்த சரண்யா எப்போதும் போலவே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல் தனுசும் இயல்பாக நடித்திருந்தார்.

அந்த வகையில், அந்த படத்தில் அவர்கள் நடித்த காட்சிகள் உருக்கமாக வெளிப்பட்டிருந்தது.

விளைவு, இப்போது தான் இரண்டு வேடங்களில் நடித்துள்ள கொடி படத்தில் மீண்டும் சரண்யாவையே தனக்கு அம்மாவாக்கி விட்டார் தனுஷ்.

எப்படி வேலை யில்லா பட்டதாரி படத்தில் வேலை வெட்டியில்லாமல் திரிந்த தனுசுக்காக, கணவனிடம் பரிந்து பேசி நடித்தாரோ அதேபோல் இந்த படத்தில் எந்நேரமும் அரசியல்வாதிகளுடன் சுற்றிக்கொண்டிருக்கும் மகனை நினைத்து கடுமையாக பீல் பண்ணும் ரோலில் நடித்துள்ளாராம் சரண்யா.

அந்த வகையில், சரண்யா-தனுசுக்கிடையிலான பாசப்போராட்ட காட்சிகள் இந்த படத்திலும் இயல்பாக வெளிப்பட்டிருக்கிறதாம்.

Related Posts