தனுசுக்கு ஜோடியாகும் ராதிகா ஆப்தே!

இந்தி நடிகையான ராதிகா ஆப்தே, பிரகாஷ்ராஜ் நாயகனாக நடித்த தோனி படத்தில் தமிழுக்கு வந்தவர். அதன்பிறகு ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் என சில படங்களில் நடித்தவருக்கு தமிழில் பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கோலிவுட்டிலுள்ள முன்னணி நடிகைகள் யாருக்குமே கிடைக்காத அரிய வாய்ப்பாக கபாலியில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதனால் ஒரேபடத்தில் உச்சாணிக்குப்போய் விட்டார் ராதிகா ஆப்தே.

rathika-apthey-danush

அந்த வகையில், ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்த ஸ்ரேயா சிவாஜி கேர்ளானது போன்று இப்போது ராதிகா ஆப்தே, கபாலி கேர்ளாகி விட்டார். அதோடு, அடுத்தபடியாக தமிழில் முன்னணி ஹீரோக்களின் படங்களில்தான் நடிக்க வேண்டும். இறங்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து வந்த ராதிகா ஆப்தே, தற்போது தனுஷ் தயாரித்து நடிக்கயிருக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. அதோடு, இந்த படத்தில் தில்லான ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Posts