இளைஞர்கள் பொறுப்பில்லாதவர்கள் என்று இனி யாரும் கூற முடியாது, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும்.
மாணவர்கள் நினைத்தால் முடியாதது ஏதும் இல்லை, என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் சிங்கப்பூர் நாட்டின் நேஷனல் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள்.
ஒரு ஆண்டாக இவர்கள் பணியாற்றி வந்த திட்டம் வெற்றி பெற்றிருப்பதோடு அனைவரையும் திரும்பி பார்க்கவும் வைத்திருக்கின்றது.
அப்படி அவர்கள் என்ன தான் செய்திருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சிங்கப்பூரின் நேஷனல் பல்கலைக்கழக மாணவர்கள் ஸ்னோஸ்டார்ம் எனும் காப்டர் (aircraft) போன்ற முன்மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
ஸ்னோஸ்டார்ம் காப்டர் (aircraft) அதிகபட்சம் 70 கிலோகிராம் எடை கொண்ட ஒரு நபரை சுமார் 5 நிமிடங்களுக்கு சுமக்கும் திறன் கொண்டிருக்கின்றது.
ஓய்வு நேரங்களில் மாணவர்களின் படைப்புகளை உருவாக்கும் ஃப்ராக்வர்க் திட்டத்தின் கீழ் உருவானதே இந்த காப்டர் (aircraft) முன்மாதிரி.
இந்த காப்டரை கொண்டு பாதுகாப்பான இடங்களில் பறக்கும் அனுபவத்தை பெற பயன்படுத்தலாம் என இதை வடிவமைத்த குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டமானது தனிமனித பறக்கும் இயந்திரம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றது என இந்த திட்டத்தின் மேற்பார்வையாளர்களில் ஒருவரான டாக்டர். ஜோர்க் வெய்ல் தெரிவித்தார்.
புதிதாக பறப்பவர்களுக்கும் எளிமையாக இருக்கமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதை இயக்குவது மிகவும் எளிய காரியமே.
அதிநவீன பேட்டரி மற்றும் மோட்டார் தொழில்நுட்பங்கள் இந்த திட்டத்தின் வெற்றிக்கு வித்திட்டதாக இத்திட்டத்தின் மேற்பார்வையாளர்களில் ஒருவரான மார்டின் ஹென்ஸ் தெரிவித்திருக்கின்றார்.
இந்த குழுவினர் ஸ்னோஸ்டார்ம் முன்மாதிரியை மேம்படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டுள்ளனர். முழுமையாக மேம்படுத்தப்பட்டு விரைவில் ஸ்னோஸ்டார்ம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.