தனியார் வைத்தியசாலைகள் , இரசாயன கூடங்களில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை மற்றும் டெங்கு இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணம் நேற்று முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் வேண்டுகோளுக்கமைவாக நேற்று முதல் குறைக்கப்படுகின்றது.
இதற்கமைவாக தனியார்வைத்தியசாலைகளில் முழுஅளவிலான இரத்த பரிசோதனைகளுக்கு 250 ரூபா ( Full blood Count (FBC)), டெங்கு தொடர்பான இரத்த பரிசோதனைக்கு (Earlier the Dengue Antigen Test) 1000 ரூபா மாத்திரமே அறவிடப்படமுடியும்.
முன்னர் இந்த சோதனைக்கு 3000 ரூபாவிற்கு மேற்பட்ட தொகை அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் தனியார் வைத்தியசாலைகள் இந்த இரத்த பரிசோதனைக்கான ஆய்வு அறிக்கையை ஒன்றரை மணித்தியாலங்களில் வழங்கப்படவேண்டும்.டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் தனியார் வைத்தியசாலை ஒழுங்குறுத்தல் திட்டத்தின் கீழ் அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இந்த புதிய கட்டணம் உள்ளிட்ட நடைமுறை மறு அறிவித்தல் வரையில் செல்லுபடியானதாகும்.