தனியார் வைத்தியசாலைகளில் அதிக பணம் அறவிடுதாக குற்றச்சாட்டு

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன ஆய்வுகூடங்கள் என்பன VAT வரியினை சாட்டிக் கொண்டு நோயாளிகளிடம் கூடுதலான பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு ஒன்று மக்களிடையே எழுந்துள்ளது.

VAT வரி திருத்தத்திற்குள் மறைந்துகொண்டு, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன ஆய்வுகூடங்களில், நோயாளர்களிடம் அதிக பணம் அறவிடப்படுவதாக இலங்கை வைத்திய இரசாயனகூட ஆய்வுகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

15 வீதத்தால் VAT வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், சில நிறுவனங்கள் அந்த அளவை விட கூடுதலான பணத்தை அறவிடுவதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைத்திய சேவைகளை நோயாளர்கள் சாதாரண விலையில் பெற்றுக்கொள்ளும் தன்மை காணப்படவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன ஆய்வுகூடங்களினால் அதிக பணம் அறவிடப்படுவதால், நோயாளர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய திட்டத்தின் தலைவர் ரஞ்சித் விதானவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எழும்பப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து அதிக பணம் அறவிடும் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன ஆய்வுகூடங்கள் தொடர்பில் தமது சங்கத்திற்கு எழுத்துமூலம் அறியத்தருமாறு தனியார் வைத்திய சேவைகள் ஒழுங்குபடுத்தல் சபையின் செயலாளர் காந்தி ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

Related Posts