தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரம் முதல் முன்னெடுக்கபப்படவுள்ளது.
அதன்படி, இந்த திட்டம் எதிர்வரும் புதன்கிழமை முதல் முன்னெடுக்கப்படும் என விஷேட வைத்தியர் அமல் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார்.
பிரதான வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண தனியார் வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்களுக்கு அருகில் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் இலவசமாக இந்த தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.