மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் சாதிக்குமாயின் எதிர்வரும் ஏப்றல் மாதம் முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் டாக்டர் ஹரித அளுத்கே கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
அரசாங்கத்தின் இந்நடவடிக்கை தொடருமாயின், அரச வைத்தியசாலைகளில் மாத்திரமன்றி, தனியார் மருத்துவ சேவைகளிலிருந்தும் ஒதுங்கியிருக்கப் போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.