தனியார் பேரூந்து சேவை புல்லுக்குளத்திற்கு மாற்றம்

யாழ். மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சேவைகள் யாவும் புதன்கிழமை முதல் புல்லுக்குளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

புல்லுக்குளத்திற்கு முன்பாக உள்ள தனியார் பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தனியார் பேரூந்து நிலையம் அமைப்பதற்கென இந்த காணி யாழ். மாநகர சபையினால் தனியார் போக்குவரத்துச் சங்கத்திற்கு குறித்த காணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பட்டார்.

இந்த காணியில் புதிய தனியார் பேரூந்து நிலையம் அமைப்பதற்கு தனியார் சங்கத்திற்கு போக்குவரத்து ஆணைக்குழு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் விரைவில் புதிய பேரூந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை காலமும் யாழ் ஸ்ரான்லி வீதியில் இருந்து வந்த தனியார் பேரூந்து தரிப்பிடம் இனிச் செயற்பாடாது என்றும் அங்குள்ள குளம் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts