யாழ். நகரில் சிறிலங்காப் படையினரின் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து சேதங்களுக்குள்ளாகியது.
இவ்விபத்து இன்று மதியம் யாழ். கஸ்தூரியார்வீதியில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது,
இன்று மதியம் யாழ். பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காரைநகர் நோக்கி விரைந்துகொண்டிருந்த தனியார் பேருந்துடன் , பின்னால் வந்த இராணுவ வாகணம் மோதியுள்ளது.சிறிலங்கா இராணுவத்தினருக்கு சொந்தமான குறித்த வாகணம், தனியார் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, தனியார் பேருந்தின் பின் பக்கத்தில் மோதியுள்ளது. இதனால் தனியார் பேருந்தின் பின் கண்ணாடி சேதத்திற்குள்ளானது. ஆயினும், மக்கள் எவரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த பகுதியில், ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.