தனியார் பேருந்துடன் இராணுவத்தினரின் பேருந்து மோதியதில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழிலிருந்து புன்னாலைக்கட்டுவன் நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துடன் நேற்று மதியம் 3.30 மணியளவில் புன்னாலைக்கட்டுவன் சந்தியில் பயணிகள் தரிப்பிடத்தில் இறக்கிவிடும் போது பலாலியில் இருந்து இராணுவத்தினரை ஏற்றிவந்த பேருந்து நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில், குரும்பசிட்டி கிழக்கு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் பத்மாராணி (வயது 38) ஊரெழு சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குணரத்னம் ரசிராஜ் (வயது 29) மற்றும் பேருந்து நடத்துனரான ஜெய்கணேஷ; (வயது 37) ஆகிய மூவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.