தனியார் பேருந்துக் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும்?

பேருந்துக் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்க நேரிடும் என்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்துச் சபை அனுமதி தராவிடில் நாடு தழுவிய ரீதியில் பேருந்து உரிமையாளர்கள் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடுவர் என்று சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

Related Posts