தனியார் பஸ் மோதியதில் வயோதிபர் படுகாயம்
தனியார் பஸ் மோதியதில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். வேம்படி வீதியில் இந்த விபத்து நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கரவண்டியில் பயணித்த வயோதிபர் மீது தனியார் பஸ் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் குருநகர் சென்ஜேம்ஸ் வீதியைச் சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ் சேவியர் (வயது 61) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹன்ரர் ரக வாகனம் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! ஒருவர் சாவு – கொடிகாமத்தில் சம்பவம்
ஏ-9 வீதியில் ஹன்ரர் ரக வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சனிக்கிழமை கொடிகாமம் கொயிலாமனைச் சந்தியில் இடம்பெற்றது.
இவ்வீதி விபத்தின் போது அதே இடத்தைச் சேர்ந்த கனகசுந்தரம் சிவராசா (வயது-59) என்பவரே உயிரிழந்தவராவார்.
வீதியிலிருந்து தனது வீட்டிற்குச் செல்வதற்காக ஒழுங்கைக்கு மோட்டார் சைக்கிளைத் திருப்பிய போது ஹன்ரர் ரக வாகனம் மோதி, அதனை மின்பம்பத்துடன் வைத்து நசித்ததில் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த அவர் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆயினும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
வாகனச் சாரதியை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.